+1 514-800-2610

பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்ட ஈரான் உயர்மட்டத் தலைவர்!

2024-09-30 07:52
உலகச் செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில் ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நஸ்ரல்லாவின் படுகொலையை அடுத்து வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தத் தியாகியின் இரத்தத்திற்கு பதில் அளிக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார்.

ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய முகவர்களின் ஊடுருவல் தொடர்பில் ஈரான் அதிகாரிகள் இடையே கவலை அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்