+1 514-800-2610

தன்னை தானே திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை

2024-09-30 07:26
உலகச் செய்திகள்

துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் கடந்தாண்டு தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வைரலான நிலையில் அப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் மணமகன், மணமகள் இன்றி தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் ‛சோலாகாமி' திருமண முறை நடைமுறை உள்ளது. இது சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை எனினும் பலபேர் இதனை செய்து வருகின்றனர்.

எதிர்பாலினம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இத்தகைய திருமணம் செய்கின்றனர். இந்தநிலையில், கடந்தாண்டு தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் (வயது 26) அவரது வீட்டின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் கடைசியாக பதிவிட்ட வீடியோவில் , உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது.

நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்