கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஆசிரியர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக கடமையாற்றி வரும் 47 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
பதின்ம வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எந்த பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.