வரலாற்று சித்தி பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியால மாணவர்கள் !
2024-09-29 07:42
இலங்கைச் செய்திகள்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 27 பேர் 9 பாடங்களில் விசேட சித்தி
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக 27 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ. லோகேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 27 மாணவர்கள் விசேட சித்திகளையும் 18 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் விசேட சித்தியையும் ஒரு பாடத்தில் திறமை சித்தியையும் பெற்று சித்தி அடைந்துள்ளதுடன் அதிகளவான மாணவர்கள் இம்முறை அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.