+1 514-800-2610

அவசரமாக தரையிறக்கப்பட்ட கனடா விமானம்

2024-09-27 09:29
கனடிய செய்திகள்

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக எடின்பரோவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அவசர நிலைமையினால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோவில் இருந்து பிராங்புரூட் நோக்கி பயணம் செய்த விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஏயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.சீ 843 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலைமையினால் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயணிக்கு என்ன உடல் நிலை பாதிப்பு என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

புறப்பட்ட விமானம் அவசர மருத்துவ நிலைமை காரணமாக திசை திருப்பப்பட்டது.

சுமார் மூன்று மணித்தியால பயணத்தின் பின்னர் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்