வட மாகாண ஆளுநராக பொறுப்பேற்றார் யாழ் மாவட்ட முன்னால் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம்.
2024-09-25 07:47
இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் புதிய அளுநர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வட மாகாண ஆளுநராக யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை மத்திய மாகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் தென் மாகாண ஆளுநராக முன்னால் மூத்த நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.