இலங்கைக்கும் நியூஸ்லாந்துக்கும் இடையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 202 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
மூன்றாம் நாளான இன்றையதினத்தின் (20.09.2024) நிறைவில் இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கட் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில் திமுத் கருணாரட்ன 83 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இதன்படி, நியூஸிலாந்து அணியைக் காட்டிலும் 202 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
முன்னதாக, இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 305 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 340 ஓட்டங்களை பெற்றது.
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.