+1 514-800-2610

இலங்கை வீரருக்கு 20 ஆண்டு தடை

2024-09-19 08:09
விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் (CA) 20 வருடங்களுக்கு பணியாற்ற இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீரவுக்கு (Dulip Samaraweera) தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டமை தொடர்பாக துலீப் சமரவீர (Dulip Samaraweera) , கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் (CA) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

துலீப் சமரவீர (Dulip Samaraweera), அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இதன்போது பெண் வீராங்கனை ஒருவருக்கு எதிராகப் பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்து கொண்டார் என துலீப் சமரவீர (Dulip Samaraweera) மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், துலீப் சமரவீரவுக்கு (Dulip Samaraweera) அவுஸ்திரேலியாவில் (CA) 20 வருடங்களுக்கு பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்