மக்கள் அதிகமாக பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியை சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கின்றனர். கோமாளிகளாக வரும் ஒவ்வொருவரும் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கோமாளியாக மணிமேகலை வந்ததுடன் அதிக அளவில் மக்களையும் கவர்ந்த்தார். தற்போதைய சீசனில் ரக்சனோடு இணைந்து மணிமேகலையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதன்படி மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளளார். நேர்மையுடனும் கடின உழைப்புடனும் என்னுடைய வேலையை செய்தேன் ஆனால் சுயமரியாதையை விட்டு கொடுத்துவிட்டு என்னால் வேலை செய்ய முடியாது என தன்னுடைய இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.