+1 514-800-2610

தளபதி 69 படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

2024-09-14 09:36
சினிமா செய்திகள்

விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.அடுத்ததாக விஜய் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறியிருந்தார்.

தளபதி 69 படத்தை தீரன்,துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் எச்.வினோத் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சென்னையில் ஆபீஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனை சமீபத்தில் எச்.வினோத் ஒரு விருது வழங்கும் விழாவில் கூறினார்.

மேலும் இப் படத்தில் கதாநாயகி பூஜா ஹெக்டேநடிக்கவுள்ளார்.இசையை அனிருத் மேற்கொள்கிறார்.பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்கள்.படத்தின் படத்தொகுப்பாளராக பிரதீப் இ.ராகவ் பணியாற்றவுள்ளார்.என தகவல்கள் வெளியாகின்றன.

கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தளபதி விஜய்க்காக ஒரு டிரிபியூட் வீடியோ வெளியிட்டுள்ளனர்.அதில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாக பேசப்படுகிறது.மக்களும் ரசிகர்களும் அதற்கான வெளிப்பாடுகளையும்,வருத்தத்தையும் தெரிவித்து வருவது போல் மிகவும் எமோஷனலான வீடியோவாக அமைந்துள்ளது.இந்த வீடியோ காட் சிகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்