பிக் பாஸில் முதல் வாரமே கடும் அதிர்ச்சி - திடீரென வெளியேறிய முக்கிய போட்டியாளர் திருநங்கை நமீதா..!!
பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். ஆரம்பம் முதலே போட்டியாளர்கள் ஜாலியாக பேசி சிரித்து பழகி வந்தனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் 5 வீட்டுக்கு இன்று கமல்ஹாசன் வந்திருக்கிறார். அவர் அகம் டிவி வழியே வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் உரையாடவும் செய்து இருக்கிறார்.
தற்போது மொத்தம் 17 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். நமீதா மாரிமுத்து மட்டும் அங்கு இல்லை.
அவர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு அவரது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகள் படும் கஷ்டங்களை பற்றி அவர் கூறியது பிக் பாஸ் ரசிகர்களையும் எமோஷ்னல் ஆக்கியது. தற்போது முதல் வாரத்திலேயே நமீதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.