+1 514-800-2610

கனடிய தேர்தல் களத்தில் - எந்த தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்..!!

2021-09-14 23:02
கனடிய செய்திகள்

கனடிய அரசின் நிதியுதவியோடு இயங்கும் கனடாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சிபிசி இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜஸ்டினின் லிபரல் கட்சி 151ஆசனங்களையும் , ஒடூல் தலைமையிலான பழமைவாத கட்சி 122 இடங்களையும், புளக் கியூபெக்வா கட்சி 29 இடங்களையும் மற்றும் ஜக்மித் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 35 இடங்களையும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்தகவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, எந்த கட்சி வெற்றி பெற்றாலும் பெரும் பான்மையை பெற்று கொள்வதில் சவால்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த முறையும் ஜக்மீத் சிங் கனடா அரசியல் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பிருக்கிறது. நடக்கவிருக்கிற தேர்தலிலும், ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பெறாத பட்சத்தில் ஜக்மீத் சிங் மீண்டும் ஒருமுறை கிங் மேக்கராக உருவாக வாய்ப்பிருக்கிறது

அதேவேளை கருத்து கணிப்புகள் படி ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 16 சதவீத வாய்ப்புகளும் லிபெரல் கட்சியினர் சிறுபான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்க 56 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க வெறும் 1 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.

2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, கனடாவில் 1,89,860 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை கனடிய பாராளுமன்ற தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளின் சார்பில் ஒன்பது தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக பதவி வகித்த அனிதா ஆனந்த் அவர்கள் மீண்டும் அதே ''ஓக் வில்'' தொகுதியிலும்,கடந்த தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியிலும் மற்றும் சஸ்கற்சுவான் வெஸ்ட் தொகுதியில் பிரபல வைத்திய நிபுணர் அல்போன்ஸ் ராஜகுமார் களமிறங்குகிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவர்,மல்கம் பொன்னையன் ஸ்கேர்போறோ சென்டர் தொகுதியிலும்,சயந் மோகன் யார்க் சவுத் வெஸ்டர்ன் தொகுதியிலும்,புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் அஞ்சலி அப்பாத்துரை வான்கூவர் கிரான்வில் தொகுதியிலும் பிராம்டன் வெஸ்ட் தொகுதியில் சிவகுமார் ராமசாமி மற்றும் முரளி கிருஷ்ணன் பிளீட்வுட் - போர்ட் கெல்லஸ் தொகுதியிலும் சுயேசையாகவும் தமிழ் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர்.

அதேவேளை பசுமை கட்சியின் சார்பில் அர்ஜுன் பாலசிங்கம் ஸ்கேர்போறோ அகின்கோட் தொகுதியிலும் போட்டியிடுகின்றார்.

கியூபெக் மாகாண வரலாற்றில் இதுவரை தமிழர்கள் எவரும் அரசியலில் போட்டியிடாத போதும். எவரும் எதிர்பார்க்காத வகையில் கியூபெக் கட்சியின் சார்பில் வுற்றமொன்ட் தொகுதியில் சோபிகா வைத்தியானந்தசர்மா அவர்கள் போட்டியிடுகின்றார்.

சோபிகா வைத்தியானந்தசர்மா போட்டியிடுகின்ற வுற்றமொன்ட் தொகுதி புதிய ஜனநாய கட்சியின் வசம் உள்ள போதும் சோபிகா அந்த தொகுதியில் கடுமையான போட்டியாளராக மாறி இருப்பதாக கியூபெக் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இருந்த போதும் 2021 கனடிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்களில் அனிதா ஆனந்த் மற்றும் ஹரி ஆனந்தசங்கரி ஆகிய இருவரும் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடா தேர்தல், கனடா மக்களுக்கு மட்டுமில்லை, புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்களுக்கும் முக்கியமான ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகிறது.அதேவேளை கனடிய தமிழர்கள் அரசியலில் காட்டுகின்ற ஆர்வமும் பங்களிப்பும் அதிகரித்து வருருக்கின்றது. இதன் காரணமாக கனடிய தமிழர்களுக்கு தேர்தலில் நான்கு பிரதான கடசிகளும் வாய்ப்பு வழங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada