+1 514-800-2610

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் - கொவிட்- 19 நோய் தொற்று..!!

2021-09-13 08:46
இலங்கைச் செய்திகள்

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் கொவிட்- 19 நோய் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில் இம் மாவட்டத்தில் கொவிட் மரணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட மக்கள் கொவிட் நோயின் பாரதூரத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் தொடர்ச்சியான அசமந்த போக்கு காரணமாக கொவிட் நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் கொவிட் தொற்றினால் இம் மாதம் 11ஆம் திகதிவரை வவுனியா மாவட்டத்தில் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் டெல்டா தொற்றுடனும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளமை அம்மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு மேலும் பல நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 35 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை மேலும் 15 பேர் டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார அதிகாரிகள் கூர்மைக்கு தெரிவித்தனர்.

குறுகிய சில நாட்களுக்குள் டெல்டா பிறழ்வு தொற்றுடன் 50 பேர்கள் அடையாளம் காணப்படும் அளவிற்கு கொவிட் தொற்று நிலவரம் வவுனியா மாவட்டத்தில் மிக மோசமாகக் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூர்மைக்கு மேலும் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் செப்டம்பர் 1ஆம் திகதி தொடக்கம் கடந்த 11ஆம் திகதிவரையான, பதினொரு நாட்களில் 1651 கொவிட் நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதியில் இருந்து, இம்மாதம் 11ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தில் 3328 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சுகாதார அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்று 11ஆம் திகதி சனிக்கிழமை வரை 276 பேர் கொவிட் தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ் எண்ணிக்கையில் நேற்று 11ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 95 கொவிட் தொற்றாளர்களும் அடங்குவதாக டொக்டர் தர்மராஜன் வினோதன் மேலும் தெரிவித்தார். மேலும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொவிட் -19 தொற்றினால் 22 பேர் இறந்துள்ளனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 1960 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada