+1 514-800-2610

தேர்தலுக்கு 9 நாட்கள் இருக்கும் நிலையில் வெற்றி பெறுவாரா..? - ஜஸ்டின் ரூடோ..!!

2021-09-12 10:40
கனடிய செய்திகள்

கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019இல் தான் பொதுத்தேர்தல் நடந்த நிலையில், இப்போது இங்கு மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பெற ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியால் முடியவில்லை. இதனால், இப்போது வெறும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாராகிவிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முற்கூட்டிய தேர்தல் பதிவுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த 9 மற்றும் 10ம் திகதி நடைபெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற நேரலையில் மக்களின் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்து, தங்களுக்குள்ளே விவாதம் செய்யும் நிகழ்வின் பின்னர் ஆளும் லிபெரல் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது.

20ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவிவருகின்றது.சிபிசி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் கன்சர்வேடிவ்கள் 31.7.% ஆதரவையும், ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியினர் 31.9% ஆதரவையும் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சியினர் 19.0% வீத ஆதரவைக் கொண்டுள்ளதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

அத்துடன், முற்கூட்டிய தோ்தல் அறிவிப்புக் குறித்து வாக்காளர்கள் மகிழ்ச்சியடையவில்லை என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் லிபரல் கட்சித் தலைவரை விட எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் சிறிய அளவில் பின்தங்கி இருப்பதாக கன்னிப்புகள் தெரிவிக்கின்றன.தேர்தல் கருத்துக்கணிப்பிற்கும் வாக்குப்பதிவுக்கும் 2 முதல் 4 சதவிகிதம் வரை மாறுபாடு இருக்கும் என்பதால் இப்போது இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சடுதியான மாற்றம் கட்சி தலைவர்களுக்கு இடையிலான விவாதத்தின் பின்னர் மக்களிடையே ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்ற அரசியல் ஆய்வாளர்கள் தேர்தல் நிறைவு பெறுவதற்கு 9 நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை முன்கூட்டி கணிப்பதில் மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே வேளை கொவிட் 19 தொற்று நோயைத் தீவிரமாக எதிர்கொள்ளும் நோக்குடனேயே பொதுத் தோ்தலை அறிவித்தாக பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தி வருகிறார். தற்போது சிறுபான்மையைக் கொண்டுள்ள லிபரல் அரசாங்கம் தொற்று நோய் நெருக்கடியுடன் தீவிரமாகப் போராடுவதற்கு ஏதுவாக கனேடியர்கள் பெரும்பான்மை ஆதரவை வழங்குவார்கள் என ட்ரூடோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் அறிவிக்கப்படடுள்ள பொதுத் தோ்தல் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறைமதிப்புக்கு உட்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனாவை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதால், ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. அங்கு 15 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 27 ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கிடைத்த நல்ல பெயரை அப்படியாக வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதே ஜஸ்டின் ட்ரூடோவின் எண்ணம். இதனால் தான் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாரானார்.

இந்நிலையில், முற்கூட்டிய தோ்தல் அறிவிப்பு குறித்து வருத்தப்படுகிறீர்களா? என விவாதத்தில் பேசிய ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் நிச்சயமாக இல்லை. நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்றார்.

இதேவேளை, மத்திய அரசுப் பணியாளர்களுக்காக கட்டாய தடுப்பூசிக் கொள்கை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இருப்பினும் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து நிலைமை ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. அரசு ஊழியர்கள், பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என கனடிய அரசு அறிவித்துள்ளது. இதற்குக் குறிப்பிட்ட அளவிலான மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்கும் வகையிலான செயல் என்று கூறி ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுதான் தேர்தல் கருத்துக் கணிப்புகளிலும் எதிரொலித்துள்ளது.

தற்போது கருத்துக்கணிப்பில் இரு கட்சிகளும் சம அளவில் இருந்தாலும் கூட மீண்டும் மூன்றாவது முறையாகப் பிரதமராகும் வாய்ப்பு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அதிகமாக உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

 

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada