+1 514-800-2610

கனடிய அரசு நிராகரித்த சுமங்கள டயசை - இத்தாலியும் ஏற்க மறுப்பு?

2021-09-07 09:14
கனடிய செய்திகள்

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் 36 வருடங்கள் இலங்கை விமானப் படையில் சேவையாற்றிய பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 57,58, 59ஆவது படையணிகளுக்கு விமானப்படை தாக்குதல் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார். இறுதிப் போரில் விமானப்படையின் பதில் தளபதியாக செயற்பட்ட அவர், விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் மீது போர்க் குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அரச படையினரின் முன்னணி பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றார்.

தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அணைத்து வான்வழி தாக்குதல்களிலும் குறிப்பாக 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகள்,வழிபாட்டு தளங்களின் மீதும் அப்பாவி பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களிலும் குண்டு வீசிய இலங்கை விமான படையின் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சில காலங்களாக இலங்கை அரசாங்கம் போர் குற்றவாளிகளான இலங்கை அரசபடை வீரர்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கும் முயற்சிகளில் கடுமையாக இறங்கி வருகின்றது.

தற்போதைய கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தினால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட போதிலும் போர்க் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அவரின் நியமனத்தை கனேடிய அரசாங்கம் நிராகரித்திருந்தது.

அது மாத்திரமின்றி இனப்படு கொலையை மறைக்கும் முகமாக அதற்கான பிரசார பணிகளை முன்னெடுக்கும் முயற்சியில் வலுசேர்க்கும் முகமாக தமிழ் மற்றும் முஸ்லீம் இனத்தை சார்ந்தவர்களையும் இணைத்துள்ளது விசேடமாக பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக அஹமட் ஏ ஜவாட் , கட்டாருக்கான தூதுவராக மபாஸ் மொஹிதீன், மற்றும் எகிப்துக்கான தூதுவராக எம்.கே.பதமநாதன் ஆகியோருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரலில் சுமங்கள டயஸ் இத்தாலிக்கான இலங்கைத் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இத்தாலி அதற்கான எந்தவித பதிலையும் கடந்த 05 மாதங்களாக வழங்கவில்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியமனம் தொடர்பாக இத்தாலிய அரசு தொடர்ந்து பதிலளிக்காமல் இருப்பது பெரும்பாலும் இத்தாலி அரசாங்கத்தினாலும் அவரது நியமனம் நிராகரிக்கப்படலாம் என்று நம்பப்படுகின்ற போதிலும் எதிர்வரும் வாரம் இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மஹிந்த இத்தாலிய பிரதமருடனான சந்திப்பின்போது இது குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada