ஐசிசி கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களை மாதாந்தம் தெரிவு செய்து அவர்களை கௌரவித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்திற்க்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப்பில் மூன்று பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இந்த பரிந்துரைப்பில் இந்திய அணியின் இரு வீரர்களான ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரரான குரபாசும் உள்ளடங்கியிருந்தனர்.
இதன்படி ஜூன் மாதத்திற்க்கான சிறந்த வீரராக ஜஸ்பிரித் பும்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் டி 20 சர்வதேச உலகக்கிண்ண போட்டியில் தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றதோடு சிறந்த வீராங்கனையாக ஸ்மிர்தி மந்தனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.