+1 514-800-2610

இஸ்ரேல் மீது தீவிரமான போர் நடத்தப்படும் - ஈரான் எச்சரிக்கை

2024-07-01 10:19
உலகச் செய்திகள்

இஸ்ரேல் லெபனானுக்கு இராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டின் மீது தீவிரமான போர் நடத்தப்படும் என்று ஐ.நா சபை கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் இந்த ஒரு கருத்தே ஈரான் அரசை முழுவதுமாக அழித்தொழிக்க போதுமான காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோகாவ் காலண்ட் சுமுகமான முறையில் ஈரான் – ஹிஸ்புல்லா பிரச்சினையை தீர்க்க வழி தேடி வருவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் பின்புலத்துடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பலஸ்தீன லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்