ஒண்டாரியோ (Ontario) வாடகை தொகை அதிகரிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாகாணத்தில் வருடாந்த வாடகைத் தொகை அதிகரிப்பு 2.5 வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாண அரசாங்கம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தற்போது நாட்டில் பணவீக்கம் 3.1 வீதமாக காணப்படும் நிலையில், ஒண்டாரியோ மாகாணத்தின் வாடகைத் தொகை அதிகரிப்பு 2.5 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான வாடகைத் தொகை அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அனைத்து மாகாணங்களை விடவும் ஒண்டாரியோவில் வாடகைத் தொகை குறைவாக காணப்படுகின்றது. கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் வாடகைத் தொகை அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.