+1 514-800-2610

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 4,100 சிறுவர்,சிறுமியர் மாயம்..!!

2021-05-31 10:29
கனடிய செய்திகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு
பாடசாலையில் 4,100 சிறுவர், சிறுமியர் மாயமாகியுள்ளதாக பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புதிதாக ஒரு கூட்டத்தினர் குடிபுகும்போது, அங்கிருக்கும் பூர்வக்குடியினர் ஓரங்கட்டப்படுகின்றனர்.
அவ்வாறாக பாடசாலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பூர்வக்குடியின பிள்ளைகள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் எத்தனை நாடுகளில் நிகழ்கிறதோ தெரியாது. ஆனால், கனடாவின் கருப்பு வரலாற்றில் அவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளது.

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission of Canada (TRC) என்னும் அமைப்பு, இப்படி மாயமான மற்றும் உயிரிழந்த 4,100 பேரை இதுவரை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், எத்தனைபேர் இதுவரை அப்படி உயிரிழந்தார்கள் என்ற உண்மையான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது. குடியிருப்பு பாடசாலை எனப்படும் பாடசாலைகளில் , இதுபோல் ஏராளமான பூர்வக்குடியின மாணவ மாணவியர், பள்ளிக்குச் சென்றவர்கள் வீடுகளுக்குத் திரும்பவேயில்லை.

இந்நிலையில், சமீபத்தில், Kamloops Indian Residential school என்ற பள்ளி அமைந்திருக்கும் இடத்தில், ராடார் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த பகுதியில், 215 சிறுவர் சிறுமியரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவர்களில் மூன்று வயது சிறுவர் சிறுமியரும் அடக்கம். அவர்கள் எப்படி இறந்தார்கள், அவர்களது மரணம் குறித்து அவர்களது பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்படாதது ஏன் என்பதுபோன்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.

இந்த விடயம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட பள்ளி 1890 முதல் 1969 வரை இயங்கிய நிலையில், அதன் பின்னர் அதை அரசு பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளது. 1978இல் பள்ளி மூடப்பட்டுவிட்டது.

எனினும் , இந்த குழந்தைகளின் மரணத்தின் பின்னணியில் இருப்போர் எத்தனை பேர் இப்போது உயிருடன் இருப்பார்கள், அவர்கள் மீது எப்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கசிமிர் (Rosanne Casimir) மேலும் கூறுகையில் , கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க குழுவின் 2015 ஆம் ஆண்டு அறிக்கை படி, கனடாவின் பழங்குடியினர் அனைவரையும் மத மாற்றும் பணியை அரசு செய்த போது நாடு முழுவதும் 1,50,000 சிறுவர்கள் இது போன்ற குடியிருப்பு பள்ளிகளுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுள் 6,000 க்கும் மேற்பட்டோர் கலாசார இன படுகொலை செய்யப்பட்டனர்.

இறந்த குழந்தைகளின் மரணத்துக்கு எந்த காரணங்களும் ஆவணங்களும் இல்லை. முழுமையான பதிவுகள் எதுவும் இல்லாததனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையை கூற இயலாது. 1890 முதல் 1978 வரை செயல்பட்ட இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்க கூடும்” என கூறப்படுகிறது. 1990 களில் தான் கனடாவில் இது போன்ற பள்ளிகள் மூடப்பட்டன என்றார்.

 

 

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada