+1 514-800-2610

இத்தாலிய-கனேடியர்கள் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட செயல்களுக்கு - ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரினார்..!!

2021-05-28 10:20
கனடிய செய்திகள்

நேற்று கனடிய நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வின்போது இரண்டாம் உலகப் போரின்போது கனடாவில் தங்கியிருந்த இத்தாலிய-கனேடியர்கள் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட செயல்களுக்கு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வியாழக்கிழமை முறையாக மன்னிப்புக் கோரி உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..

1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜேர்மனியுடன் இத்தாலி கூட்டணி வைத்த பின்னர் கனடாவில் தங்கியிருந்த இத்தாலிய ஆண்கள் 600 பேர் கடாவில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டனர். நான்கு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர், அதே நேரத்தில் சுமார் 31,000 பிற இத்தாலிய-கனேடியர்கள் எதிரிகளாக அறிவிக்கப்பட்டனர்,

குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டமைக்காக இத்தாலிய சமூகத்திடம் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். அந்தச் செயலுக்காக நாங்கள் வருந்துகிறோம் எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உரையை தொடர்ந்து கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ’டூல், என்.டி.பி..தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஓ'டூல் தனது உரையில் இத்தாலிய கனேடியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இரண்டாம் உலகப் போரின்போது எதிர்கொண்ட பாதிப்புக்கள் குறித்த கதைகளை பகிர்ந்து கொண்டார். பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கனேடிய அரசாங்கத்தால் அவா்கள் அனுபவித்த துயரங்களை அவா் விபரித்தார்.

அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர். அத்துடன், இரண்டாம் தர குடிமக்களைப் போலவே நடத்தப்பட்டனர். பெரும்பாலும் அவர்களின் குடும்பப்பெயர் அல்லது அவர்களின் பாரம்பரிய அடையாளங்கள் காரணமாக மட்டுமே அவா்கள் துயரங்களை அனுபவித்தனர் எனவும் ஓ'டூல் கூறினார்.

1990 ஆம் ஆண்டில்முன்னாள் பிரதம மந்திரி பிரையன் முல்ரோனி கனடாவில் இத்தாலிய-கனேடிய சமூகம் எதிர்கொண்ட துன்பங்களுக்காக மன்னிப்புக் கோரினார் என்பதையும் எரின் ஓ’டூல் சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலிய-கனேடியர்கள் அனுபவித்த துயரங்கள் கனேடிய வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும் என என்.டி.பி..தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்தார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada