+1 514-800-2610

‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக கனடிய பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்..!!

2021-05-26 15:03
கியூபெக் செய்திகள்

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்களை உலகம் அறிந்திருந்தும், தட்டிக்கேட்கவும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன் வரவில்லை. ஓர் இனத்திற்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பிற்கு உலகமே வாய்மூடி கிடப்பது என்னவொரு அவமானம். இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பு அராஜகம், கொடுமைக்கு எப்போது நீதி கிடைக்கும் எனும் கேள்வி இன்னமும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.

உலகம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2009 ஆம் ஆண்டு இலங்கை ஆயுதப் படையினர் தமிழர்கள் மீது புரிந்த படுகொலையில் பொதுமக்கள் 70,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு 300,000 இற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்க்கப்பட்ட இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக இன்று கடைப்பிடிக்கிறார்கள். மரணமானவர்களையும், காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளையும் வாழ்க்கைத் துணைகளையும், நீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டவர்களையும் இன்று மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நாம் நினைவுகூருகிறோம். பன்னிரெண்டு வருடங்களின் பின்னரும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. உண்மை, நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான தேடல் இன்றும் தொடர்கிறது.

இந்த நிலையில் கனடிய பாராளுமன்றதில் கியூபெக் மாகாணத்தின் லாவல் இல்ஸ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் எல்-கூறி மற்றும் விமி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அனி குர்திலகிஸ் அவர்களும் ‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை நினைவுகூர்ந்து கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார்கள்,

அங்கு உரையாற்றிய லாவல் இல்ஸ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் எல்-கூறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மூலம் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்காக இந்த வேளையில் பிரார்த்திப்பதாகவும் அவர்களுக்கான நீதியை பெற்று கொடுப்பதற்கு தான் தொடர்ந்து குரல் குடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் கனடிய அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்காக தொடர்ந்து பாடுபடும் எனவும் இவ்வாறான தமிழ் படுகொலைகள் மீண்டும் அந்த மண்ணில் இடம் பெற கூடாது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய விமி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அனி குர்திலகிஸ் உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் 12 ஆவது ஆண்டு நினைவு நாளான அனுஷ்டித்து வருகின்றனர். அந்த வகையில் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்த மற்றும் பல ஆண்டுகால போரினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நாம் நினைவுகூருகிறோம்.

இந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada