+1 514-800-2610

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 54 கொரோனா தொற்றாளர்கள்..!!

2021-05-07 10:59
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் மாத்திரம்  322 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று ஆறாம் திகதி காலை 10 மணி முதல் இன்று 10 மணி வரை திருகோணமலை சுகாதார பிரிவில் 17 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், மூதூர் பிரதேசத்தில் 10 பேரும், கிண்ணியா சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் 8 பேரும்,குச்சவெளி பிரதேசத்தில் 4 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், சேருவில பிரதேசத்தில் இருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 408 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதாகவும், 16 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மொத்தமாக மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று (07) காலை 10.00  மணி வரைக்கும் 1763 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி ஜீ. எம்.கொஸ்தா தெரிவித்தார்.

இதேவேளை பெருநாள் காலமாக இருப்பதினால் வீடுகளை விட்டு தேவையற்ற விதத்தில் மக்களை நடமாட வேண்டாம் எனவும், சன நெருக்கடியான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் சுகாதார பாதுகாப்புடன் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளை பேணி நடக்குமாறும்,பிரயாணம் மேற்கொள்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. ஆர் .எம். தௌபீக் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada