+1 514-800-2610

தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது? - சீமான் கண்டனம்..!!

2021-05-07 10:42
இந்திய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப் பாதியாகக் குறைத்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், தேநீர் கடைகள் போன்ற அத்தியாவசியக்கடைகள் மதியம் 12 மணிக்கே மூடப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். கொரோனா வீரியம்பெற்றுப் பரவிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் கட்டுப்பாடும், விதிகளும் அவசியமென்றாலும்கூட அதற்காகத் தொலைநோக்குப் பார்வையின்றிக் கண்மூடித்தனமாக விதிகளைக் கொண்டு வந்து மக்களை முடக்குவது ஏற்கத்தக்கதல்ல.

நிரந்தரமான வருமானமோ, மாதாந்திர ஊதியமோ இன்றி அமைப்புசாராத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் அன்றைக்கு உழைத்து கிடைக்கிற சிறுதொகையைக் கொண்டுதான் அன்று அன்றைக்குச் சமைத்துண்ணுகிறார்கள். அத்தகைய மக்கள் உழைத்து ஊதியம்பெற்று வீடு திரும்பவே மாலை 6 மணிக்கு மேலாகும் எனும்போது, பகல் 12 மணிக்கே கடைகளை மூடுவது அவர்களை வெகுவாகப் பாதிக்கும். இத்தகைய பரந்துபட்டப் பார்வையின்றிப் பொத்தாம் பொதுவாக முடிவெடுத்து மேம்போக்காக அணுகுவது மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

அதுமட்டுமின்றி, குறைவான நேரமே கடைகள் இயங்கும் எனும் அறிவிப்பு மக்களைப் பீதியடையச் செய்து, முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கவும், நெருக்கிக் கொண்டு தனிநபர் இடைவெளியைத் தகர்க்கவும் பெரும் வாய்ப்பாக மாறிப்போகும். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற காய்கறிக் கடைகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது? என்பதற்குப் பதிலில்லை.

மனித உயிர்க்குடிக்கும் மதுபானக்கடைகளை இப்பேரிடர் காலத்தில் முழுநேரமும் மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம்? என்பது புரியவில்லை. ஊரடங்குக் காலக்கட்டத்தில் ஊதியமும், வருமானமும் பெரியளவு இல்லாத இத்தருணத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்திருப்பது உழைக்கும் மக்களின் சிறுஊதியத்தையும் உறிஞ்சத்தானே வழிவகுக்கும்?

கடந்தாண்டு கொரோனா ஊரடங்குக்காலத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவற்றை மூடக்கோரி வீட்டுவாசலில் கறுப்புக்கொடியேந்திப் போராடிய ஐயா ஸ்டாலின், இன்றைக்குத் தனது அரசு பதவியேற்கையில் கொரோனா தொற்று முன்பைவிட வீரியமாகப் பரவி உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கும்போது மதுபானக்கடைகளை மூடுவதற்குத் தயங்குவது ஏன்? என்பது முற்றிலும் விந்தையாக உள்ளது.

ஆட்சியதிகாரத்தில் ஏறுவதற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு நடைபெறுவதற்கு முன்பே, அதிகாரிகளை அழைத்து ஆலோசித்து அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஐயா ஸ்டாலின், மதுபானக்கடைகளைத் மூடாது திறந்து வைத்து வேடிக்கைப் பார்ப்பது மிக மோசமான அணுகுமுறையாகும்.

ஆகவே, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குத் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய அக்கடைகளின் நேரத்தை மாலை 6 மணிவரை நீட்டிப்புச் செய்ய வேண்டும் எனவும், மதுபானக்கடைகளை ஊரடங்குக்காலத்தில் கட்டாயம் மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada