+1 514-800-2610

இலங்கையிலும் பரவும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ்: பரபரப்பில் மக்கள்..!!

2021-04-26 11:38
இலங்கைச் செய்திகள்

இலங்கையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்தசில வாரங்களாக அதிகரித்து வருகிறது. அங்கு 99,691பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 638 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறை தலைவர் நீலிகா மாலவிஜே கூறும்போது, “இலங்கையில் வீரியமிக்க புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக இந்த புதிய வைரஸ் விளங்குகிறது. காற்றில் சுமார் 1 மணி நேரம் வரை இது உயிருடன் இருக்கும்” என்றார்.

கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாடப்பட்டதையடுத்து அங்கு வேகமாக பரவி வருவதாக தெரிகிறது.

குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 2, 3 வாரங்களில்3-வது அலையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதார ஆய்வாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் அசிலா குணவர்தன கூறும்போது, “கரோனா முதல் அலையின்போது அறிகுறிகள் குறைவாக இருந்தன. இப்போது கரோனா பாதித்தவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் போதுமான அளவில் உள்ளன” என்றார்.

இதற்கிடையே அங்கு பல வழிகாட்டு நெறிமுறைகள் கோவிட் கட்டுப்பாடுகள் மே 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மத்தியில் நாளொன்றுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை 150 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது 600 ஆக அதிகரித்துள்ளது,

முன்பு கொரோனா வந்த போது நோய் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவில்லை. இப்போது வெளிப்படையாக அறிகுறிகள் தெரிகின்றன. இப்போது இலங்கையில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று இலங்கை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கொரோனா வைரஸ் வகைகளில் 3 வகைமாதிரிகள் உலகம் முழுதும் இருந்து வருகின்றன. அவை பிரிட்டனின் B.1.1.7 மாதிரி, தென் ஆப்பிரிக்க B.1.351 மாதிரி மற்றும் பிரேசிலின் P.1 வேரியண்ட் ஆகும்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada