+1 514-800-2610

"கியூபெக்கில், பிரெஞ்சு மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி"-மேயர் Valérie Plante!

2024-04-25 16:14
கியூபெக் செய்திகள்

மொன்றியலின் மேயர், வலேரி பிளாண்டே, நகர்ப்புற உள்ளூர் விற்பனையாளர்களால் "பொன்ஜர்-ஹாய்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்தி , அதற்குப் பதிலாக பிரஞ்சு மொழியில் மட்டுமே வணக்கம் கூறுவதை ஊக்குவிக்க வேண்டுமென குறிப்பிட்டார்

ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே பிளான்டே இவ்வாறு கூறினார், "மொன்றியலுக்கு வரும் மக்கள் இது ஒரு பிரெஞ்சு மொழி பேசும் நகரம் என்பதை அறிவார்கள்."
எனவும் குறிப்பிட்டார். மேலும் அனைவரையும் வரவேற்பதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்,

ஆனால் வர்த்தகத்தை நடத்துவதையும் பிரெஞ்சு மொழியில் தொடர்பாடல்களையும் அவர் வலியுறுத்தினார், பிரெஞ்சு மொழி பேசுவது பெருமை என குறிப்பிட்ட அவர் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேயரின் கருத்துக்களை , மொன்றியலில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை விவரிக்கும் அலுவலகமான Québécois de la Langue Française (OQLF) இன் புதிய ஆய்வுக்கு மத்தியில் வந்துள்ளது.

அதனடிப்படையில் 2010ல் 84 சதவீதமாக இருந்த சில்லறை விற்பனையாளர்களின் பிரஞ்சு மொழியின் பயன்பாடு 2023ல் 71 சதவீதமாகக் குறைந்ததைக் காட்டும் அறிக்கையுடன் Plante இன் உணர்வுகள் ஒத்துப்போகின்றன. "bonjour-hi" போன்ற இருமொழி வாழ்த்துக்களின் அதிகரிப்பு OQLF ஆல் குறிப்பிடப்பட்டு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. , இது கியூபெக்கில் பிரெஞ்சு ஆதிக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருமொழி பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், கியூபெக்கின் பிரெஞ்சு மொழி அமைச்சர், அமைச்சர்களின் அறிக்கைகளை மதிப்பிடும் போது பிரெஞ்சு மொழியின் முன்னிலையில் எந்தக் குறைவும் இல்லை என உறுதியளிதுள்ளார்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழி அமைச்சர் Jean-François Roberge, இந்த செய்தி கியூபெக் ஒரு இருமொழி நாடு என்ற தவறான எண்ணத்தை நீக்குகிறது என எடுத்துரைத்தார்.

"கியூபெக்கில், பிரெஞ்சு மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி" எனவும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்