+1 514-800-2610

மியான்மர் வன்முறையை தடுக்க முயலும் ஐநா - பாதுகாப்பு கவுன்சிளுக்கு செல்லவிடாமல் தடைபோடும் சீனா..!!

2021-04-12 10:26
உலகச் செய்திகள்

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அந்நாட்டு ராணுவம் நாடாளுமன்ற தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அவசர நிலையை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவரை 550-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் தூண்டுகோலாக இருப்பவர்களுக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு உலக நாடுகள் பல தொடர்ந்து கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி வந்தன. மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு அதிக ஆயுத சப்ளை செய்யும் இரு நாடுகள் ரஷ்யா மற்றும் சீனா ஆகும். சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தப்படி மியான்மர் ராணுவம் இந்த இரு நாடுகளின் தயாரிப்பில் உருவான ஆயுதங்களை விலை கொடுத்து வாங்குகிறது.

இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோசப் குஹெல் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகின் பெரும் சக்திவாய்ந்த நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்து வருவதன் காரணமாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மியான்மர் வன்முறை விவகாரத்தில் தலையிட விடாமல் இந்த இரு நாடுகளும் தடை போட்டு வருகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு மூத்த தலைவர் ஆங் சான் சூ காயை விடுதலை செய்ய கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியனின் நேரடி முதலீடு மியான்மரில் மிகக் குறைவு. இதனால் ஐரோப்பிய யூனியன் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என ஜோசப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் சீனாவின் நேரடி முதலீடு 19 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதிக தொகையை மியான்மர் நாட்டில் முதலீடு செய்து இருக்கும் நாடு சீனா. ரஷ்யா, சீனா ஆகியவை தங்கள் நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் பேச்சுவார்த்தையை திட்டமிட்டு தள்ளிப் போடுவதாகவும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada