முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2024 ஆண்டிற்கான இப்தார் நிகழ்வு இன்று 02.04.2024 மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது
முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இப்தார் நிகழ்வானது மாவட்ட செயலகத்தில் இரண்டாவது முறையாக இவ்வாண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அகதியா பாடசாலை ஒன்றினை அமைக்குமாறும் அதற்கான முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும் மாவட்ட செயலாளர் அவர்கள் இங்கு தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மு. முபாரக், முஸ்லீம் கலாச்சார உத்தியோகத்தர்,மாவட்ட செயலக கணக்காய்வாளர் ,மௌலவி, இந்து மத தலைவர், மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.