நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 04 மணி நேரம் தமது சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதற்கு ஆதரவாக யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 08 மணி முதல் மதியம் 12 மணி வரையில் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.