+1 514-800-2610

பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவிப்பு..!!

2021-03-18 12:00
உலகச் செய்திகள்

உலகில் எந்த நாடும் விடுதலைப் புலிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு அந்த இயக்கத்தை தடை செய்யவில்லை. மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு செய்து வந்த பொய் பிரசாரங்களினால் உலக நாடுகள் அந்த அமைப்புக்கு தடை விதித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. ஆனால், இங்கிலாந்தில் மட்டும் இந்த தடை தொடர்ந்து வந்தது. இருப்பினும், விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்விதமான பயங்கரவாத செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்திடம் 2008ஆம் ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.


இதனை உள்துறை அமைச்சகம் நிராகரித்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கிறது. விடுதலை புலிகள் அமைப்பு எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை என்று வாதிடப்பட்டது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அந்த மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டிருந்தது.அந்த முடிவின் அடிப்படையில், இந்த தடையை நீக்க ஆணையம் கேட்டுள்ளது.


அதேவேளை பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்று (மார்ச் 18) இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது .

விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்தியது உரிமைப் போராட்டமே தவிர பயங்கரவாதம் அல்ல என்று உலகின் பல்வேறு நீதிமன்றங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு இலங்கைத் தமிழர் நடத்திவரும் அறவழிப் போராட்டத்திற்கு உலகின் ஆதரவை திரட்ட இது உதவும் என கருதப்படுகிறது.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada