+1 514-800-2610

டக் டிக் டோஸ் திரைப்படம் நாளை இலங்கை முழுவதும் வெளியாகிறது.

2024-03-14 08:18
சினிமா செய்திகள்

ஈழத்தில் உருவாகியுள்ள "டக் டிக் டோஸ்" திரைப்படம் கடந்த சிவராத்திரி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி பலரின் வரவேற்பை பெற்ற நிலையில், நாளைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

கொழும்பு PVR திரையரங்கில் மாலை 4.45 மணிக்கும் , கொழும்பு தெமட்டகொட றீகல் திரையரங்கில் காலை 10.15 மணிக்கும் , யாழ்ப்பாணம் றீகல் திரையரங்கில் மாலை 4 மணிக்கும், வவுனியா அமுதா திரையரங்கில் மாலை 06.30 மணிக்கும், கல்முனை GK திரையரங்கில் மாலை 06.30 மணிக்கும், கண்டி KCC திரையரங்கு , மருதானை சினிசிட்டி திரையரங்கில் இரவு 10.30 மணிக்கு மற்றும் திருகோணமலை நெல்சன் திரையரங்கிலும் திரையிடப்படவுள்ளது. .

அதேவேளை எதிர்வரும் 17ஆம் திகதி சுவிஸ் Liestal மாநிலத்தில் உள்ள KINOORIS திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற "புத்தி கெட்ட மனிதரெல்லாம்" திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் "டக் டிக் டோஸ்" எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளமையால், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் இலங்கையின் அனைத்து பக்கங்களிலும் உள்ள திரையரங்குகளில் திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்