+1 514-800-2610

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி..!!

2021-03-09 10:49
உலகச் செய்திகள்

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இரண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது.


தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and Commonwealth Affairs) அவர்கள் பிரித்தானியாவின் தலைமையில் மார்ச் 24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கை மீதான வரைவுத்தீர்மானம் தொடர்பில் தனது அதீத அதிருப்தியையும் வரைவுத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் தெளிவற்றதாகவும் போதுமானதாகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி ஆசியப்பிராந்தியத்திற்கான அமைச்சரிற்கு (Foreign and Commonwealth Office, UK) கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.மேலும் அவர் வரைவுத்தீர்மானத்தில் பின்வரும் விடயங்களைக் கருத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

• 27 ஜனவரி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கத்தவறியுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளிற்கு உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த பிரித்தானிய அரசு வரைவுத்தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளுமா? எனவும்
• IIIM அவசியமானது என்ற உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் வரைவுத்தீர்மானத்தில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும்.


• ஐ.நா பாதுகாப்புக் குழுவிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அணுகுமுறை அதன் நிரந்தர உறுப்பினர்களில் இருவரின் வீட்டோ அதிகாரங்களினால் தீர்மானிக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு இலங்கை விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதனை உள்ளடக்க தவறிவிட்டதாகவும் எனவே அதனை உள்ளடக்க வேண்டியும்
இலங்கை அதிகாரிகளின் அதிகரித்துவரும் அத்துமீறிய செயற்பாடுகளிலிருந்து மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கு இந்தத்தீர்மானம் வழிவகுக்கின்றது என்பதனை உறுதிப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் வரைவுத்தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலிற்கான கால எல்லை 18 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது ஏற்றுக்கொள்ள முடியாத நீண்ட காலமாக இருப்பதனால் 6 மாதங்களிற்குள் பொறுப்புக்கூறல் குறித்த அறிக்கையை கோருவதற்கு வரைவுத்தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரை செய்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கும் தப்பிப்பிழைத்தவர்களிற்கும் பிரித்தானிய அரசாங்கம் கடன்பட்டுள்ளதாகவும் தற்போதைய வரைவினை மேலே முன்மொழியப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி விரைவில் மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டம் 10 நாளை அடைந்திருக்கும் நிலையில், தமிழ்மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கிய அழுத்தங்களே இந்த முன்னேற்றத்துக்கான காரணங்களாகும். இதனால் இது அவரின் அகிம்சைப்போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என கருதலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

நன்றி : திலீபன் வழியில்

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada