+1 514-800-2610

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை இரணைதீவு அடக்கம் - தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம்..!!

2021-03-02 10:14
இலங்கைச் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழபவர்களின் உடல்களை,கிளிநொச்சி – இரணைத்தீவில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்தோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணைதீவு அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சகோதரர்களால் பல்வேறு பகுதிகள் முன்மொழியப்பட்டபோதும் அவற்றை தவிர்த்து, பல இன்னல்கள் மற்றும் பல கட்ட போராட்டங்களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு மீள் குடியேறிய குறித்த பகுதியை தெரிவு செய்தமை கவலை அழிப்பதாக குறிப்பிட்டார்.


அதே நேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக தொற்று பரவ வாய்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாகவே இரணை தீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதிலை எனவும் இரணைதீவு அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் நாளை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அருட்தந்தை குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பு தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில்…

"உடல்(ஜனாஸா)களை இரணைத்தீவுக்கு அப்புறப்படுத்த எத்தனிக்கின்றனர். தவறான கதைகளைப் புனைந்துரைத்து, நெடுகிலும் அவர்கள் செய்வதே சரி என்று நிரூபிக்கவே விரும்புகின்றனர். நம்பிக்கை இழந்து , அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada