+1 514-800-2610

ஓவனில் குழந்தையை வைத்த தாய் .

2024-02-12 06:22
உலகச் செய்திகள்

அமெரிக்காவின் மிஸெளரியில் குழந்தையைத் தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாக தவறுதலாக மைக்ரோ வேவ் ஓவனில் (அடுப்பில்) தாய் வைத்ததால், அந்தக் குழந்தை இறந்தது.

மிஸெளரி மாகாணம், கான்சாஸ் சிட்டியைச் சோ்ந்த மரியாதோமஸ் என்ற பெண் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது . அந்தப் பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார் குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருப்பதைப் பாா்த்து விசாரித்தனா். அப்போது, மரியா தன் குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பதற்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவன் அடுப்பில் தவறுதலாக வைத்த காரணத்தினாலேயே குழந்தை உயிரிழந்து உள்ளமை தெரியவந்தது.

இது தொடா்பாக ஜாக்சன் கவுன்டி அரசு வழக்கறிஞர் ஜீன் பீட்டா்ஸ் பேக்கா் கூறுகையில், இந்த சோகமான சம்பவத்தின் கொடூரமான தன்மையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உயிரிழந்த குழந்தையை நினைத்து வருந்துகிறோம். சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக குழந்தையின் தாய் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி