+1 514-800-2610

மீன்களின் விலையில் வீழ்ச்சி !!

2024-02-11 05:55
இலங்கைச் செய்திகள்


சந்தையில் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைய நாட்களில் ஆயிரம் ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் மீனின் விலை 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது.

அதன்படி, பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோகிராம் பாரை மீனின் விலை 400 ரூபாவாகவும் லின்னா மீனின் விலை 300 ரூபாவாகவும் , எட்டவல்லா மற்றும் பலயா மீனின் விலை 300 முதல் 350 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நுகர்வோர் மீனை கொள்வனவு செய்வதில் நாட்டம் செலுத்துவதில்லை எனவும் இதனால், மீனின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி