+1 514-800-2610

பம்பலப்பிட்டியில் பேரூந்து விபத்து ....

2024-02-11 05:50
இலங்கைச் செய்திகள்

பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளாகின.

கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த பேரூந்தும் கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிச் சென்ற பேரூந்தும் மோதியே விபத்துக்குள்ளாகின.

வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை திடீரென வீதிக்குச் செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி