+1 514-800-2610

ஐஸ்லாந்தில் 3 ஆவது முறையாக வெடித்து சிதறிய எரிமலை .

2024-02-10 05:48
உலகச் செய்திகள்

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.

இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர். சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற நிலையில் இந்த எரிமலை வெடிப்பானது 3 ஆவது முறையாக நேற்று ஏற்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி