+1 514-800-2610

தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள்

2020-02-05 06:03
தாயக வலம்

1957ஆம் ஆண்டு திருகோணமலையில் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் 63ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

04.02.1957 சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற கோழைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது.
அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் கொல்லப்பட்டபோது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு அகவை 03.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக எட்டு ஆண்டுகளால் முதல் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 72,வது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் அன்னாரின் 63,வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி