+1 514-800-2610

ஆப்பிள் கைக்கடிகாரத்தை மூலம் கொரோனா பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்..!!

2021-01-18 23:57
தொழில்நுட்பம்

நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டம் (Mount Sinai Health System in New York) மற்றும் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University in California) போன்ற பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆய்வுகளின்படி, ஃபிட்பிட், கார்மின் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற டிராக்கர்கள் இதய துடிப்பு மாறுபாட்டை ஒரு மெட்ரிக் மூலம் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் உடலில் ஏதேனும் தவறு உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதய துடிப்பு மாறுபாட்டின் மெட்ரிக், அடிப்படையில் இரண்டு இதய துடிப்புகளுக்கு இடையிலான நேரத்தை அளவிடுகிறது. அதாவது, உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால், உங்கள் உடல் எந்த நோய்த்தொற்றுக்கும் ஆளாகவில்லை என்றால், நீங்கள் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து உங்கள் இதய துடிப்பு ஏற்ற இறக்கமாக இருப்பது பொதுவானது. உதாரணமாக, உங்கள் நரம்பு மண்டலத்தில் மன அழுத்தம், நிதானமான நேரங்கள் மற்றும் எந்தவொரு நேரத்திற்கும் தகுந்தாற்போல உங்கள் இதய துடிப்பு மாறும். பெரும்பாலும் அவை பொதுவாக நடக்கின்றன.


இருப்பினும், உங்கள் உடல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலும் குறிப்பாக அழற்சி நோய்த்தொற்றுகள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால், நரம்பு மண்டலம் மெதுவாக செயல்படும். இது இதயத் துடிப்புகளில் குறைந்த மாறுபாட்டிற்கு வழிவகுக்கிறது. டிராக்கர்களைப் பற்றிய மவுண்ட் சினாய் ஆய்வின் ஆசிரியரும், ஐகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நிறுவனத்தின் மருத்துவ உதவி பேராசிரியருமான ராப் ஹிர்டன் (Rob Hirten) கூறியதாவது, " இப்போது, மக்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள், நன்றாக உணரவில்லை என்று அவர்கள் சொல்வதை நாங்கள் நம்புகிறோம்.

ஆனால் ஆப்பிள் வாட்ச் அணிந்த ஒரு நபரிடம் இருந்து இதுபோன்ற எந்த ஒரு உள்ளீடும் தேவையில்லை மற்றும் அறிகுறியற்ற நபர்களையும் அடையாளம் காண முடியும். தொற்று நோய்களை சிறப்பாக கட்டுப்படுத்த இது ஒரு வழியாகும். உடலில் வீக்கம் உருவாகும் போது இதய துடிப்பு மாறுபாடு குறிப்பான்கள் மாறுகின்றன என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். மேலும் கொரோனா ஒரு நம்பமுடியாத அழற்சி நிகழ்வு. மக்கள் அதை அறிவதற்கு முன்பே அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணிக்க இந்த ட்ராக்கர்கள் நம்மை அனுமதிக்கிறது. ” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மைக்கேல் ஸ்னைடர் (Michael Snyder) கூறியதாவது, "தொற்றுநோய்களைக் கண்டறிய டிராக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சுகளைப் பயன்படுத்துவதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இதன் மூலம் ஒரு நிலையான கண்காணிப்பை செயல்படுத்த முடியும். எனவே கொரோனா வைரஸ் மட்டுமல்ல, வேறு எந்த நோயையும் விரைவாகக் கண்டறிய இது உதவுகிறது" எனக் கூறினார்.

மேலும் இந்த ஆய்வு இன்று கொரோனா பரிசோதனை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு முற்றிலும் மாறுபட்டது. பொதுவாக கொரோனா பரிசோதனைக்கு குறைந்தபட்சம் 24 மணிநேரமாவது ஆகலாம். எனவே சில நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதனை செய்ய முடியும். இதனால் கொரோனாவை முன்கூட்டியே கண்டறிவதற்கான செயல்திறன் குறைகிறது. இதன் காரணமாகவே பிட்னஸ் ட்ராக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களின் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் ஆப்பிள், கார்மின், ஃபிட்பிட் அல்லது வேறு எந்த அணியக்கூடிய தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஆய்வுக்கு ஸ்பான்சர்களாக பங்கேற்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டறிய உதவியது. எனவே மக்களுக்கு உயிர் காக்கும் விஷயங்களை அவை செய்கிறது என்று அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய காலங்களில் இந்த ஆய்வுகள் ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இன்றைய டிராக்கர்களுடன் வரும் தீவிரமான சான்றுகளை உறுதிப்படுத்துவதில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

 

துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal