+1 514-800-2610

தாயின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட பவதாரணியின் உடல் !

2024-01-28 05:10
சினிமா செய்திகள்

இளையராஜாவின் மகளும், மறைந்த பாடகியுமான பவதாரணியின் உடல் தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி மாலை காலமானார். அவரின் உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக இளையராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் பவதாரணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்யேக அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் சென்றனர். நேற்று (27) காலை அவரது உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு அருகில் பவதாரணியின் உடல் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது

 

 

 

 

 

 

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி