+1 514-800-2610

தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என கனேடிய பிரதமர் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வில் உறுதி.

2024-01-22 05:31
கியூபெக் செய்திகள்

நேற்றைய நாளில் Le Château Royal மண்டபத்தில் கியூபெக் தமிழ் சமூக மையத்தின் ஏற்பாட்டில் 40 மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வு பிரமாண்டமாக இடம்பெற்றது இந்த நிகழ்வில் தமிழர்களின் கலை கலாசாரம் பண்பாடு தொன்மை வரலாறுகளை எடுத்துரைக்கும் பல்வேறுபட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் கலந்துகொண்ட அதேவேளை பிரதம விருந்தினராக பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்து கொண்டார் அவர் தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், 1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான லிபரல் கட்சி 1800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது எனவும்

இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக கனடா பார்க்கப்படுகிறது.

அத்துடன் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது எனவும்

இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது.

இந்தநிலையில் இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் செயற்பட்டு வருகிறது.

அத்துடன் வேறு எந்த நாடும் நடைமுறைப்படுத்தாத வகையில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

இந்த செயற்பாடுகள் தொடரும், தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்று கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி