+1 514-800-2610

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் மீண்டும் கோளாறு!!

2024-01-06 14:18
கனடிய செய்திகள்

ஜமைக்கா சென்றிருந்த  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.கடந்த 3 மாதத்தில்  பிரதமரின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைத்தந்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்பும்போது, அவர் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டிருந்தது.இதன் காரணமாக கனடா பிரதமர் சுமார் 36 மணித்தியாலங்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி, ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார்,இந்த பயணம் நிறைவடைந்து கடந்த 4ம் திகதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 3ம் திகதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர் விமானத்தில் கோளாறு இருப்பதைக் கண்டறிந்தனர்.விமானத்தில் ஏற்பட்ட குறித்த கோளாறை சீர் செய்வதற்காக கனடாவிலிருந்து ஒரு குழுவினர் மற்றொரு விமானம் மூலம் ஜமைக்காவுக்குச் சென்றிருந்தனர்,இதனைத் தொடர்ந்து பழுது பார்க்கப்பட்ட பின் இரண்டு விமானங்களும் கனடா திரும்பியுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் விமான பராமரிப்புக்குழுவினரிடம் கனடா அரசு தீவிர விசாரணை நடத்தி வருகின்றமையும் சுட்டிக்காட்டதக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி