+1 514-800-2610

மொன்றியல் திருமலை ஒன்றியத்தால் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி..!!

2024-01-05 18:36
கியூபெக் செய்திகள்

பொலன்நறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள பராக்கிரம சமுத்திரம், மன்னம்பட்டி குளம் முதலியனவற்றின் வான்கதவுகள் திறக்கபட்டதின் விளைவாக மகாவலி கங்கையின் கிளை ஆறான வெருகல் ஆற்றில் நீர்மட்டம் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்துள்ளது.

இதன் விளைவாக திருகோணமலையின் வட்டவன், மாவடிச்சேனை, சேனையூர், ஆணைத்தீவு முதலிய ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் வட்டவன் ஶ்ரீ தான்தோன்ரீஸ்வரர் வித்தியாலயத்தில் 106 குடும்பத்தைச் சேர்ந்த 295 ஆட்களும், மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் 140 குடும்பத்தைச் சேர்ந்த 429 ஆட்களும் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மொத்தமாக பாதிக்கப்பட்ட 662 குடும்பங்களுக்குத் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் உலர் உணவுப் பொதிகள் 2024/01/05 ஆம் ஆகிய இன்று வழங்கப்பட்டன.

திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு. சண்முகம் குகதாசன் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை சிவானந்தன் பொருளாளர் திரு.இராசரத்தினம் கோகுலதாசன் முதலியோர் இவற்றை வழங்கி வைத்தனர்.

வெருகல் பிரதேச செயளாலர் திரு. அனாஸ் வெருகல் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திரு.சுந்தர லிங்கம் மற்றும் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த வழங்களுக்கான அனுசரணையைக் கனடாத் திருக்கோணமலை நலன்புரிச் சங்கம், கனடா மொன்றியல் திருமலை ஒன்றியம் ஆகியன வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி