+1 514-800-2610

குளிந்த நீரில் மூழ்கி புத்தாண்டை வரவேற்ற கனடியர்கள் !!

2024-01-02 07:20
கனடிய செய்திகள்

2024 ஆம் ஆண்டானது தற்போது பிறந்துள்ளது .

பல நாட்டு மக்கள் தங்கள் கலாசாரம் மற்றும் மரபு ரீதியாக புத்தாண்டை வரவேற்றனர் .

இந்நிலையில் மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சாரமொன்றின் அடிப்படையில் புத்தாண்டை கனடிய மக்கள் வரவேற்றுள்ளனர்.

பனிக்கரடி மூழ்குதல் ( polar bear plunge) என அழைக்கப்படும் கடும் குளிர்ந்த நீரில் நீந்தும் புத்தாண்டை வரவேற்கும் மரபு கனடாவில் காணப்படுகின்றது.

இந்த புத்தாண்டு காலப் பகுதியிலும் பெரும் எண்ணிக்கையிலானர்கள்; குளிர்ந்த நீரில் மூழ்கி புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

நத்தார் புத்தாண்டு காலத்தில் கனடாவில் கடுமையான குளிர் நீடிக்கும் நிலையில், பனிக்கரடி மூழ்குதல் என்னும் நீர் விளையாட்டு ஊடாக கனடியர்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

கனடாவின் பல்வேறு மாகாணங்களில் இந்த பனிக்கரடி மூழ்குதல் அல்லது குளிர்ந்த நீரில் மூழ்கி நீந்தும் புத்தாண்டு கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கனடாவின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் இவ்வாறு மக்கள் குளிர்ந்த நீரில் மூழ்கி புத்தாண்டை வரவேற்றமை வினோதமான ஓர் செயற்படாக காணப்பட்டது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி