+1 514-800-2610

கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளருக்கான விருதினை வென்ற மொன்றியல் மூத்த எழுத்தாளர் வீணைமைந்தன்..!!

2023-12-16 09:18
கியூபெக் செய்திகள்
 

கடந்த வெள்ளிக்கிழமை 15ம் திகதி கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளர்களுகள் மற்றும் பத்திரிகைத்துறை ஆசிரியர் ஆகியோர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்வருடத்துக்கான விருதுகளைப் தொழிலதிபர் ,தேவதாஸ் சண்முகலிங்கம் (தாஸ்) மற்றும் மொன்றியால் எழுத்தாளர் வீணைமைந்தன் சண்முகராஜா ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதம விருந்தினராக ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்களும் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சின் இணை அமைச்சருமான விஜே தணிகாசலம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கனடா மொன்றியால் வாழ் எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ -கே. ரி. சண்முகராஜா அவர்கள் எழுதிய மூன்று நூல்களான ‘மண்ணும் மனசும்’. .மறக்கத் தெரியாத மனசு. மற்றும் ‘தமிழ்ச் சினிமாவில் மகாகவி பாரதியாரின் பாடல்கள்’ ஆகியவற்றின் நூல்கள் அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் நூலக மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி