+1 514-800-2610

வீட்டிலேயே மயோ சீஸி கட்லெட் பண்ணலாம் வாங்க !!

2023-11-30 01:02
ஆரோக்கியம்

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 4
பச்சைமிளகாய்- 2 (நறுக்கியது)
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- பொறிப்பதற்கு
பிரெட் தூள்- ஒரு கப்
மைதா- ஒரு ஸ்பூன்
மயோ- 3 ஸ்பூன்
சீஸ் - துருவியது ஒரு கப்

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக்கொள்ள வேண்டும்.அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்தூள், கரம் மசாலாதூள், பிரெட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் மயோனிஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவுடன் நீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிளேட்டில் பிரெட் தூளை பரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவை கையில் எண்ணெய் தடவிக்கொண்டு எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அதன் நடுவே மயோ, சீஸ் கலவையை வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் நன்றாக புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனை மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் நன்றாக புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மயோ சீஸி கட்லெட் தயார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி