+1 514-800-2610

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வு !!

2023-11-22 00:56
இலங்கைச் செய்திகள்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்படுவது வழமை .

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.

அந்தவகையில் கார்த்திகை மாதம் 21 ம் திகதி முதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுவது வழமை அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று (21) உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தி மாவீரர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி