+1 514-800-2610

வரவு - செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2023-11-21 08:00
இலங்கைச் செய்திகள்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தன.

அத்துடன், பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ் மற்றும் ஹெக்டர் ஹப்புகாமி ஆகியார் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.

தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீமும் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தார்.

டளஸ் அழகப்பெரும தலைமையில் அணியினரும் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களித்தனர்.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் கடந்த 13ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மறுநாள் 14ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 7ஆவது நாளாக பாராளுமன்றத்தில் இடம்பெறுவதுடன், இன்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

குழுநிலை அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 13ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

2024 நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ.2,851 பில்லியன், அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.1 சதவீதமாக உள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி