கந்தப்பளை -ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி 84 வயதான வயோதிபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காட்டெருமை தாக்குதலுக்கு இலக்கானவர் ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தை சேர்ந்த முனியன் கங்காணி என்பவராவார்.
ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவில் நேற்று முன்தினம் பகல் பிங்கந்தலாவை பகுதியிலிருந்து காட்டெருமை ஒன்று நகருக்கு திடீரென வந்துள்ளது.
அந்த காட்டொருமையை விரட்டியடிக்க நகரில் சிலர் முற்பட்டுள்ளனர். இதன்போது குறித்த வயோதிபர் காட்டெருமையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.