+1 514-800-2610

முட்டை லாலிபாப் செய்யலாம் வாங்க ...

2023-11-19 05:45
ஆரோக்கியம்

தேவையான பொருட்கள்

முட்டை- 4 (அவித்தது)

வெங்காயம்- 1 (நறுக்கியது)

பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)

மிளகாய் தூள்

தனியா தூள்

கரம் மசாலா தூள்

சீரகத்தூள்

மிளகு தூள்

பிரெட் தூள்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் 4 அவித்த முட்டைகளையும் துருவிக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஒரு பாதித்திரத்தில் துருவிய முட்டைகளை போட்டு அதில் பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், உப்பு மற்றும் பிரெட் தூள் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகு தூள்சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டை கலவையில் தேய்த்து பின்னர் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு நன்றாக பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்

பொறித்த உருண்டைகளில் டூத் ஸ்டிக்கை சொருகி வைத்தால் சுவையான, சூடான, ருசியான முட்டை லாலிபாப் தயார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி