வவுனியாவில் பாரவூர்தியுடன் பேருந்து மோதி விபத்து - மூவர் காயம்
வவுனியா ஓமந்தையில் இன்று பாரவூர்த்தியுடன் இ. போ. ச பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பாரவூர்த்தியின் மீது யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மோதியதில் பாரவூர்தி குடைசாய்ந்துள்ளது.
இவ்விபத்தில் பாரவூர்த்தியில் பயணித்த சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்துடன், பேருந்தில் பயணித்த பிரயாணி ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.